இளம் வயதிலேயே மாரடைப்பா.... காரணம் என்ன தெரியுமா?
தற்போது இளம் வயதிலேயே மாரடைப்பால் நிறைய பேர் இறந்து வருகிறார்கள். உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் அது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
எனவே 30 வயதை எட்டிய ஒவ்வொருவரும் தாங்கள் உண்ணும் உணவில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது முக்கியம். எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
உணவின் ருசிக்காக பலர் சமைக்கும் போது உணவில் எண்ணெயை அதிகம் சேர்க்கிறார்கள். அதோடு நிறைய பேர் எண்ணெயில் பொரித்த பூரி, வடை, பஜ்ஜி போன்றவற்றை அடிக்கடி உட்கொண்டு வருகிறார்கள்.
இப்படி எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வதால் உடலில் கலோரிகள் அதிகரிப்பதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
பலர் எண்ணெய் தான் உணவிற்கு சுவையைத் தருவதாக தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எண்ணெய் சேர்க்காமலேயே உணவுகளை சுவையாக சமைக்கலாம்.
நிறைய பேர் எண்ணெய் தான் உணவிற்கு சுவையைத் தருவதாக தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எண்ணெய் சேர்க்காமலேயே உணவுகளை சுவையாக சமைக்கலாம்.
பேக்கிங் செய்யலாம்
உணவுப் பொருட்களை எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக, பேக்கிங் செய்து சாப்பிடலாம்.
பேக்கிங் செய்வதற்கு குறைவான அளவிலேயே எண்ணெய் தேவைப்படும் மற்றும் பேக்கிங் செய்யும் போது உணவுகள் நன்கு மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
நாண்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்
சமையலில் குறைவான அளவில் எண்ணெய் பயன்படுத்த விரும்பினால் நல்ல தரமான நாண்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்.
நாண்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்க குறைவான எண்ணெயே போதுமானது மற்றும் உணவுகளும் அடிப்பிடிக்காமல் இருக்கும்.
க்ரில் செய்யலாம்
உணவுகளில் எண்ணெய் அதிகம் சேர்க்க வேண்டுமென நினைத்தால் இறைச்சிகள் மற்றும் காய்கறிகளை க்ரில் அல்லது நெருப்பில் வாட்டி சாப்பிடலாம்.
இம்மாதிரி சமைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து வெளியேற்றப்படுவதோடு உணவுகளும் நன்கு சுவையாக இருக்கும்.
அதுவும் சமைக்கும் உணவுப் பொருட்கள மசாலாக்கள் சேர்த்து பிரட்டி ஊற வைத்து, பின் நெருப்பில் வாட்டும் போது அதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
வேக வைத்து சாப்பிடலாம்
சமைக்கும் முறைகளிலேயே ஆவியில் உணவுகளை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அந்த உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் அப்படியே இருக்கும் மற்றும் அந்த உணவுப் பொருட்களின் அமைப்பும் மாறாமல் இருக்கும்.
முக்கியமாக இந்த முறையில் சமைக்கும் போது சிறிது கூட எண்ணெய் தேவைப்படாது.
காய்கறி அல்லது இறைச்சி வேக வைத்த நீர்
சமையலில் எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக காய்கறி அல்லது இறைச்சி வேக வைத்த நீர் மற்றும் நீரை பயன்படுத்தலாம்.
இப்படி காய்கறிகள் மற்றும் இறைச்சிகளை வேக வைக்க இவற்றைப் பயன்படுத்தும் போது அந்த உணவு இன்னும் சுவையாக இருக்கும்.