கிரானில் வீடு வீடாக தேடிச்சென்ற சுகாதார அதிகாரிகள்!
கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தடுப்பூசி பெறாத அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரி.திவாகரன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தடுப்பூசி பெறாத அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.இன்பராஜாவின் மேற்பார்வையில் வீடு வீடாக சென்று நேற்று தடுப்பூசி ஏற்றப்பட்டது.
நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினால் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தடுப்பூசி பெறாத அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தகவல் வழங்கி வரும் பட்சத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. மேலும் இந்த நடவடிக்கையில் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.




