பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு சம்பவம் ; சுகாதார அமைச்சர் விஜயம்
வெடிப்புச் சம்பவத்தினால் சேதமடைந்த பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் தற்போதைய நிலைமையைக் கண்டறிவதற்காகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (26) பிற்பகல் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த விபத்தில் உயிரிழந்த வைத்தியசாலை ஊழியர் குறித்துத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவரது இறுதிச் சடங்குகளை நடத்துவதற்குத் தேவையான அனைத்து தலையீடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அந்த குடும்பத்தின் எதிர்கால நலனுக்காகத் தேவையான இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மற்றைய ஊழியருக்குத் தேவையான அதிகபட்ச சுகாதார வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.