24 மணித்தியாலத்தில் 730 இலங்கையர்கள் கைது
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல், போதைப்பொருள் தேவைக் குறைப்பு, புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடு ஒன்றாக” விசேட தேசிய பொலிஸ் நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலத்தில் 730 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நேற்று வெள்ளிக்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 728 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முழு நாடு ஒன்றாக
கைது செய்யப்பட்டவர்களில் 07 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு, ஒருவர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இச்சோதனைகளின் போது 272 கிராம் ஹெராயின், 602 கிராம் ஐஸ் , 527 கிராம் கஞ்சா,175 கஞ்சா செடிகள், 224 கிராம் ஹஷீஷ், 375 போதை மாத்திரைகள், 41 கிராம் மதனமோதகம் மற்றும் 383 கிராம் மாவா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த “முழு நாடு ஒன்றாக” தேசிய நடவடிக்கை தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.