யாழில் தொழிலுக்கு சென்ற ஹட்டன் இளைஞன் மீது தாக்குதல் ; 08 சந்தேகநபர்கள் கைது
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு தொழிலுக்கு சென்றிருந்த போது, ஹட்டன் - நோர்வூட் வெஞ்சர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் காவல்துறையினரால் குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நோர்வூட் பகுதியிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
நோர்வூட் வெஞ்சர் பகுதியிலிருந்து பருத்தித்துறைக்கு தொழிலுக்காக சென்றிருந்த இளைஞன் ஒருவர் மீதே, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் ஊடாக பருத்தித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நோர்வூட் காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.