இரு பேருந்துகள் மோதி பாடசாலை மாணவர்கள் காயம்
தலவாக்கலை - ஹட்டன் பிரதான வீதியில் திங்கட்கிழமை (16) காலை இடம்பெற்ற பாடசாலை பேருந்து விபத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர் .
இன்று காலை 7:45 மணியளவில், தலவாக்கலை புனித பற்றிக் கல்லூரி (St. Patrick's College) மாணவர்களை ஏற்றிக்கொண்டு வழமை போல் பயணித்த சிறிய ரக பேருந்து, அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தின் பின்புறத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தின் போது பேருந்தில் பயணித்த இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின் அதிவேகமே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்த தலவாக்கலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சீர் செய்ததுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.