தொலைபேசியில் உரையாடியபடி பேருந்து செலுத்திய சாரதி; கடும் விசனம்
ஹட்டனில் இருந்து கினிகத்தேனைக்கு பயணித்த பேருந்து ஒன்றில் சாரதி தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ஒற்றைக்கையால் பேருந்தை செலுத்திய சம்பவம் தொடர்பில் கடும் விமர்சங்கள் முன்வைக்கபப்ட்டுளது.
இது தொடர்பில் பயணி ஒருவர் பகிர்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பேருந்தை செலுத்திக் கொண்டிந்த வேளையில் சாரதி, தொலைபேசியில் உரையாடிய படியே ஒற்றைக் கையால் பேருந்தை செலுத்திச் சென்றுள்ளார்.
சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை அவர் இவ்வாறு பேருந்தை செலுத்தி சென்றுள்ளார். சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியானதை அடுத்து , சாரதியைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
நாட்டில் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து உயிரிழப்புக்களும் அதிகரித்து வரும் நிலையில் சாரதியின் பொறுப்பற்ற செயல் தொடர்பில் சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.