கிருஷ்ணரின் வழித்தோன்றல் என மேவாத் முஸ்லிம்கள் தங்களை கருதுவது ஏன்?

India Death
By Shankar Aug 06, 2023 11:38 PM GMT
Shankar

Shankar

Report

ஹரியாணாவின் நூஹ்வில் கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் நூஹ் முதல் குருகிராம் வரையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணரின் வழித்தோன்றல் என மேவாத் முஸ்லிம்கள் தங்களை கருதுவது ஏன்? | Haryana Communal Violence 6 People Death

மேலும் குறித்த வன்முறை தொடர்பாக இதுவரை 55 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 141 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நூஹ் பகுதி பொலிஸ்மா அதிபர் வருண் சிங்லா தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரிக்க 3 விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், ஏன் நூஹ் பகுதியில் வன்முறை நிகழ்ந்தது? இந்தக் கேள்விக்கான பதில் இந்தப் பகுதியின் வரலாறு, நிலவியல் மற்றும் சமூக அமைப்புடன் தொடர்புடையதாக உள்ளது.

வன்முறை நிகழ்ந்த நூஹ் எங்கு அமைந்துள்ளது?

குருகிராமில் இருந்து 50 கி.மீ. தொலைவில் பளபளக்கும் பல மாடி கட்டடங்களுடன் கூடிய நூஹ் மாவட்டத்தில் வசிப்பவர்களில் 79 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம் மக்கள்.

கிருஷ்ணரின் வழித்தோன்றல் என மேவாத் முஸ்லிம்கள் தங்களை கருதுவது ஏன்? | Haryana Communal Violence 6 People Death

இந்தப் பகுதிக்கு கடந்த 2016ஆம் ஆண்டுதான் நூஹ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அதற்கு முன்பாக மேவாத் என்று அழைக்கப்பட்டது. இங்கு வாழும் முஸ்லிம்கள் மீயோ முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அதன் காரணமாக இந்தப் பகுதி மேவாத் என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பகுதியின் பெரும்பாலான பகுதிகள் பின்தங்கிய நிலையில் உள்ளது. குடிநீரில் இருந்து கல்வி, சுகாதாரம் வரை இந்தப் பகுதி இந்தியாவின் மற்ற மாவட்டங்களைவிட பின்தங்கியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையில், இது நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இப்போதும் ஹரியாணாவின் நூஹ் (மேவாத்) மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலை இப்படித்தான் இருக்கிறது.

தெற்கில் ராஜஸ்தானோடும் கிழக்கில் உத்தர பிரதேசத்தோடும் ஹரியாணாவை இணைக்கும் இந்த மாவட்டத்தின் ஆண்டு தனிநபர் வருமானம் அருகில் உள்ள குருகிராமுடன் ஒப்பிடும்போது பத்து சதவீதம் கூட இல்லை.

கிருஷ்ணரின் வழித்தோன்றல் என மேவாத் முஸ்லிம்கள் தங்களை கருதுவது ஏன்? | Haryana Communal Violence 6 People Death

கடந்த 2014ஆம் ஆண்டு ஹரியாணா அரசாங்கத்தின் அறிக்கையின்படி, குருகிராமின் தனிநபர் வருமானம் ரூ.3,16,512 ஆகவும், நூஹ்வின் தனிநபர் வருமானம் ரூ.27,791 ஆகவும் இருந்தது. இதற்குப் பிறகு தரவு கிடைக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளில், சைபர் குற்றங்களின் புதிய மையமாக நூஹ் உருவெடுத்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டில், 52,974 வழக்குகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 12 சதவீத வழக்குகள் நூஹ் தொடர்பானவை. நூறு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது தொடர்பான 28,000 சைபர் குற்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

ஆனால் மேவாத் ஒரு மாவட்டம் மட்டுமல்ல, கலாசார மற்றும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இது ஹரியாணாவிலிருந்து ராஜஸ்தானின் பரத்பூர் மற்றும் உத்தரபிரதேசத்தின் மதுரா மாவட்டம் வரை நீண்டுள்ளது.

கிருஷ்ணரின் வழித்தோன்றல் என மேவாத் முஸ்லிம்கள் தங்களை கருதுவது ஏன்? | Haryana Communal Violence 6 People Death

இந்த விஷயங்கள் திங்கட்கிழமை நிகழ்ந்த வன்முறையுடன் மேவாத்தை இணைக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை விஷ்வ ஹிந்து பரிஷத் தலைமையில் நடைபெற்ற பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரை குருகிராம் வழியாக மேவாத்தில் நிறைவடைய இருந்தது.

இந்த யாத்திரையில் ஈடுபடும் மக்கள் குருகிராமில் இருந்து மேவாத் பகுதியில் அமைந்துள்ள நல்ஹரேஷ்வர் கோவிலை அடைகின்றனர்.

அதன் பின்னர் யாத்திரை இந்தக் கோவிலில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீங்கர் கிராமத்தைச் சென்றடைகிறது.

யாத்திரையில் பங்கேற்கும் மக்கள் அங்கிருந்து ஷ்ரங்கேஷ்வர் மகாதேவ் கோவிலை அடைந்து ஜலாபிஷேகத்தை நிறைவு செய்கிறார்கள்.

கிருஷ்ணரின் வழித்தோன்றல் என மேவாத் முஸ்லிம்கள் தங்களை கருதுவது ஏன்? | Haryana Communal Violence 6 People Death

ஆனால் நல்ஹரேஷ்வர் கோவில் அருகே நடந்த வன்முறைக்குப் பிறகு, இந்த யாத்திரை தொடர்ந்து நடைபெறவில்லை.

விஷ்வ ஹிந்து பரிஷத் தலைமையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது.

மஹாபாரதத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்து கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களை பிரபலப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த யாத்திரையின் நோக்கம்.

“இந்து சமூகம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மேவாத்தில் பெரும்பான்மையாக இருந்தது. ஆனால் இப்போது அது மதமாற்றத்தால் முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் இடமாக மாறிவிட்டது, இந்துக்களின் வாழ்க்கை இங்கு கடினமாகிவிட்டது,” என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கூறுகிறது.

விஷ்வ ஹிந்து பரிஷத் கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதியில் தனது இருப்பை அதிகரிக்கத் தொடர்ந்து முயன்று வருகிறது. வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்ப முடியாது என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், ஹரியாணாவின் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, “மத யாத்திரைக்குச் சென்றவர்கள் எத்தனை பேர் இதில் பங்கேற்பார்கள் என்று முன்பே சொல்லவில்லை. சரியான தகவல் இல்லாததால் நிலைமை கட்டுப்படுத்த முடியாததாக மாறியது,” என்று கூறியிருந்தார்.

கிருஷ்ணரின் வழித்தோன்றல் என மேவாத் முஸ்லிம்கள் தங்களை கருதுவது ஏன்? | Haryana Communal Violence 6 People Death

மூத்த பத்திரிகையாளர் ராதிகா ராமசேஷன், இந்த முயற்சிகளை மக்களைப் பிரிவுப்படுத்தும் அரசியலாக தான் பார்ப்பதாகக் கூறுகிறார்.

அவர் பேசும்போது, “தற்போது ஹரியாணாவில் பாஜகவின் நிலை நன்றாக இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே எப்படியாவது பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்தொட்டு, ஹரியாணாவின் அரசியல், சாதி அடிப்படையில் பிளவுபட்டுள்ளது.

மேலும் எப்போதெல்லாம் அரசியல் மதத்திற்குப் பதிலாக சாதி அடிப்படையில் பிளவுப்பட்டிருப்பதாக பாஜக நினைக்கிறதோ, அப்போதெல்லாம் அதை மத அடிப்படையில் கொண்டு வர முயல்கிறது,” என்ற விமர்சனத்தை அவர் முன்வைத்தார்.

ஆனால், மேவாத்தின் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் முஸ்லிமாக இருக்கும்போது, இங்கு பாஜகவுக்கு எத்தகைய வாய்ப்பு கிட்டும் என்ற கேள்வி எழுகிறது.

கிருஷ்ணரின் வழித்தோன்றல் என மேவாத் முஸ்லிம்கள் தங்களை கருதுவது ஏன்? | Haryana Communal Violence 6 People Death

இந்தக் கேள்விக்கு பதிலளித்த ராதிகா ராமசேஷன், “மேவாத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 80 சதவீதம். ஆனால் உ.பி.யின் ராம்பூரை நீங்கள் உதாரணமாகப் பார்த்தால் அங்கும் முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். அங்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பலத்தால் பாஜக தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளது.

நூஹ்வில் நிகழ்ந்த வன்முறையின் அடிப்படையில் ஹரியாணாவின் மற்ற பகுதிகளில் உள்ள இந்துக்களை ஈர்க்க பாஜக முயலும். வரும் பொதுத் தேர்தல் வரை இந்தக் கதை தொடரும்.

ஆனால் ஹரியாணாவில் இது எந்தளவு வேலை செய்யும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் சாதிய அரசியல் தொடங்கிவிட்டால், அதை மதத்தின் அடிப்படையில் பிரிப்பது சற்று கடினம்” எனக் குறிப்பிட்டார்.

மேவாத் பகுதியுடன் மகாத்மா காந்திக்கு உள்ள தொடர்பு மேவாத்தில் வாழும் முஸ்லிம்கள் மீயோ முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவர்களை மகாத்மா காந்தி ஒரு காலத்தில் 'இந்தியாவின் முதுகெலும்பு' என்று வர்ணித்தார். மேவாத்தின் இந்த வரலாற்றையும் சமூகப் பின்னணியையும் புரிந்து கொண்ட எழுத்தாளர் விவேக் சுக்லா, மேவாத்தின் முஸ்லிம்கள் தங்களை சிறப்பு வாய்ந்தவர்கள் என்று நம்புவதாகக் கூறுகிறார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், “இங்கு வாழும் முஸ்லிம்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறியவர்கள்.

இதன் காரணமாக இங்குள்ள முஸ்லிம் சமூகம் இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் முஸ்லிம் சமூகத்திலிருந்து வேறுபட்டது. இங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர் இன்றும் இந்து மதம் தொடர்பான அனைத்து நம்பிக்கைகளையும் பின்பற்றி வருகின்றனர்.

இதில் கோத்திரம் பார்ப்பது போன்றவை முக்கியமானவை. மதம் மாறுவதற்கு முன்பு தங்களின் இந்து சாதி என்ன என்பதை இன்னும் நினைவில் வைத்திருக்கும் பல முஸ்லிம்களை நான் சந்தித்திருக்கிறேன்.

இது மட்டுமல்லாமல், இந்த முஸ்லிம்கள் தங்களை அஹிர்களாகவும், இந்து கடவுளான கிருஷ்ணரின் வழித்தோன்றல்களாகவும் கருதுகின்றனர்.

இந்தப் பகுதி பிரிஜ் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது,” என்றார். இதனுடன், இந்தியாவின் சுதந்திரம், பிரிவினை மற்றும் மகாத்மா காந்தியுடனும் மேவாத்துக்கு ஆழ்ந்த தொடர்பு உள்ளது.

பாகிஸ்தானுக்கு இடம் பெயர்வதைத் தடுத்த காந்தி

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், நாடு இரண்டாகப் பிரிந்தபோது, திடீரென நாட்டின் பல இடங்களில் கலவரம் வெடித்தது.

ராஜஸ்தானின் பரத்பூரில் நடந்த கலவரங்களில் மேவாத்தில் வசிக்கும் மீயோ முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர்.

விவேக் சுக்லா இதுகுறித்துக் கூறும்போது, “ராஜஸ்தானின் பரத்பூரில் நடந்த மாபெரும் படுகொலையில் தங்களை எப்படியாவது காப்பாற்றிக் கொண்டு மேவாதிகளின் பிரதிநிதிகள் மகாத்மா காந்தியிடம் முறையிட்டனர்.

அந்த நாட்களில் ஒரு முழக்கம் எழுப்பப்பட்டது. ஒன்று இனப்படுகொலைக்கு உள்ளாவது அல்லது பாகிஸ்தான் செல்வது. எனவே, பாகிஸ்தானுக்கு செல்ல மேவாத் முஸ்லிம்கள் சம்மதித்தது மட்டுமின்றி பல முஸ்லிம்கள் எல்லையையும் அடைந்தனர்,” என்றார்.

இந்த நேரத்தில், டெல்லியின் ஷஹ்தாரா, தர்யாகஞ்ச், பேகம்பூர், கரோல் பாக் மற்றும் பஹர்கஞ்ச் ஆகிய இடங்களிலும் கலவரம் வெடித்தது.

ஆனால் மகாத்மா காந்தி டெல்லியின் பிர்லா மாளிகையில் மட்டும் கலந்துகொண்டு கலவரத்தைத் தடுக்க முயன்றார்.

“செப்டம்பர் 20, 1947 அன்று ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தின்போது, மியோ தலைவர் சௌத்ரி யாசின் கான் காந்திஜியிடம் மேவாத்தின் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லத் தயாராக இருப்பதாகக் கூறினார். இதைக் கேட்ட காந்தி கலங்கினார்.

பாகிஸ்தானுக்கு செல்லத் தயாரான முஸ்லிம்களை எல்லையைத் தாண்ட விடாமல் தடுக்க அவரே மேவாத் செல்ல முடிவு செய்தார்,” என விவேக் சுக்லா குறிப்பிடுகிறார்.

யாசின் கானுடனான இந்த சந்திப்புக்குப் பிறகு சில வாரங்களுக்குப் பிறகு, காந்தி மேவாத்தின் கசேடா கிராமத்தை அடைந்தார்.

காந்தியின் மேவாத் வருகையை விவரிக்கும் விவேக் சுக்லா, “காந்திஜி பிர்லா ஹவுஸிலிருந்து மேவாத்தை அடைய இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகியிருக்க வேண்டும்.

அப்போது தௌலா குவான் செல்வதற்கு சரியான சாலைகள் எதுவும் இல்லை. ராஜஸ்தானின் ஆல்வார் மற்றும் பரத்பூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கசேடாவில் உள்ள முகாம்களில் வசித்து வந்தனர்.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தனர். காந்திஜி கசேடாவை அடைந்தவுடனேயே, மீயோ முஸ்லிம்கள்பாகிஸ்தானுக்கு செல்லவேண்டிய அவசியமில்லை என்று கிட்டத்தட்ட ஒரு ஒழுங்கான தொனியில் காந்தி கூறினார்.

இந்தியா உங்களுக்கு சொந்தமானது, நீங்கள் இந்தியாவுக்கு சொந்தமானவர்கள் என காந்தி பேசினார். இதைக் கேட்டதும் அங்கிருந்த முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டனர்,” என்று கூறினார்.

ஹரியாணாவில் உள்ள மேவாத்தின் கசேடா கிராமம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டில், கசேடா கிராமத்தைச் சேர்ந்த மூத்த சர்தார் கான் சர்வதேச ஊடகம் ஒன்றின் நிருபர் சல்மான் ரவியிடம், மகாத்மா காந்தி முஸ்லிம்களுக்கு உரையாற்றிய நாளில் தான் பேரணியில் கலந்துகொண்டதாகக் கூறினார்.

“அப்போது எனக்கு பத்து வயது, அவரைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் எனக்கு நினைவிருக்கிறது. அவருடைய அழைப்புக்குப் பிறகு, நாங்கள் அனைவரும் இங்கேயே நின்றுவிட்டோம்,” என கான் குறித்த ஊடகத்திடம் கூறியிருந்தார். ’

“மேவாத் முஸ்லிம்கள் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிராக இருந்தனர். ஆனால் கலவரங்கள் நடந்தன, சூழல் மோசமாக இருந்தது. சுற்றிலும் அச்சமும் பீதியும் நிலவியது.

ஆனால் எங்கள் முன்னோர்கள் இங்கேயே இருக்க முடிவு செய்தனர். அதற்காக இன்று பெருமிதம் கொள்கிறோம்,” என்றும் சர்தார் கான் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, சரவணை, கொழும்பு, Le Blanc-Mesnil, France

02 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்லின், Germany

21 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US