வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டை ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உடற்பிடிப்பு நிலையம் ஒன்றில் அவுஸ்திரேலியப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும், ஒருவரை, நேற்று (15) கொழும்பு மேலதிக நீதவான் தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பம்பலப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிணையில் செல்ல அனுமதி
இந்தச் சம்பவம் குறித்து அவுஸ்திரேலியப் பெண் சுற்றுலாத்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
உடற்பிடிப்பு நிலையத்திற்குள் முறைப்பாட்டாளருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக அவர் முறைப்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேற்கொண்டு விளக்கமளித்த பம்பலப்பிட்டி பொலிஸார், ஒரு வெளிநாட்டுப் பிரஜையின் அனுசரணையின் கீழ், பார்வைக் குறைபாடுள்ள நபர்களால் இந்த உடற்பிடிப்பு நிலையம் நடத்தப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதவான், சந்தேகநபரை பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.