இலங்கையில் நால்வரின் வெறிச்செயல்: ஒருவர் பலி! மற்றுமொருவர் வைத்தியசாலையில்
பதுளை - அப்புத்தளையில் இன்றையதினம் (22-08-2023) மாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரகல - ஹாலி-எல வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நபர், ஹோட்டல் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஹோட்டலுக்குள் நுழைந்த நால்வர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உள்ள நோக்கம் தெளிவாக இல்லை மற்றும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதகவும் அப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.