ஹப்புத்தளை கொலை சம்பவம்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!
கடந்த மாதம் ஹப்புத்தளையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மற்றும் வாகனம் ஒன்றைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை இலங்கை பொலிஸார் நாடியுள்ளது.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (10-09-2023) இலங்கை காவல்துறை ஊடக அறிக்கையை வெளியிட்டு, இதனை தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத் தகடு போலியானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இது தொடர்பில் பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதுடன், இது தொடர்பான எந்தவொரு தகவல்களும் தியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 071 859 1531 அல்லது பண்டாரவளை பொலிஸ் – 057 222 2260/057 223 1612 ஆகிய இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறும் கோரியுள்ளனர்.