அஸ்வெசும பயனாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளிகளுக்கான கடந்த ஓகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கல் இன்று (01.11.2023) முதல் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை 'அஸ்வெசும வாரம்' பிரகடனப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணக் கொடுப்பனவு
"தற்போது, ஜூலை மாதம் தொடர்பான கொடுப்பனவுகளை நாங்கள் செய்துள்ளோம்.
அடுத்ததாக, 1,365,000 பயனாளிகளுக்கு 8.5 பில்லியன் ரூபாயை வங்கிகளுக்கு வழங்க நிதி அமைச்சகம் மற்றும் திறைசேரி ஏற்பாடு செய்துள்ளதாக நம்புகிறோம்.
அதன்படி, இன்று முதல் பயனாளிகள் தங்களது நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். செப்டம்பர் மாதத்தைப் பொறுத்து அந்தக் கட்டணம் செலுத்தப்படும். இந்த 1,365,000 பயனாளிகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.
ஏனெனில் தற்போது மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் வந்துள்ளன, அதேபோல் அடையாள அட்டையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வங்கிகளில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. இந்த கொடுப்பனவுகள் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அனைத்து கொடுப்பனவுகளும் செலுத்தி நிறைவு செய்யப்படும்."எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.