நகைப்பிரியர்கள் ஹேப்பி; இன்றும் குறைந்த தங்கம் விலை!
கொரோனா மற்றும் உலக பொருளாதார நெருக்கடிகளால் தொடர் அதிகரிப்பில் இருந்து வந்த தங்கம் விலையானது ஜூன் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இன்றைய தங்க விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளமை தங்க நகை வாங்க காத்திருந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் 5, 485 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.43,880 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து கிராம் 4,493 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ. 35,944 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
அதேவேளை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.