ஜனாதிபதி கோட்டாபய விடுத்த தீபாவளி வாழ்த்துச் செய்தி!
அறியாமை எனும் இருளை அகற்றி மனதுக்கு அமைதியைத் தரும் ஞானத்தின் விழிப்புணர்வை தீபாவளி அடையாளப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், இந்தச் சிறப்பு திருவிழா அறத்தின் வலிமையையும் ஆணவத்தின் பயனற்ற தன்மையையும் குறிக்கிறது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
விரைவில் அல்லது பின்னர் உண்மை வெற்றி பெறும், மகிழ்ச்சியும் அமைதியும் உதயமாகும் என இந்து பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்தச் சிறப்பு நன்நாளில் நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம் மற்றும் தெய்வீக ஆற்றல் கிடைக்க வாழ்த்துவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.