ஹனுமன் ஜெயந்தியில் பணமழை கொட்டப்போகும் ராசிக்காரர்கள்
அனுமன் ஜெயந்தி ஏப்ரல் 12 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. சிவனையும் பெருமாளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனை வணங்கினால் நீங்கள் சந்தித்த துன்பங்கள், தொல்லைகள் எல்லாம் நீங்கும்.
ஹனுமன் ஜெயந்தி நாளில் 5 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணமழை கொட்டப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களின் நீண்ட காரியங்கள் நிறைவேறும். உங்களுக்கு பலரது ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். இந்த நாளில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அது வருங்காலத்தில் நல்ல வளத்தை கொடுக்கும். காலங்காலமாக கிடைக்காமல் இருந்து வந்த பணம் கிடைக்கும். நிதி நிலைமையும் சீராகும். பணத்திற்கு திண்டாடியவர்கள் இனி அவர்கள் கையில் பணம் புரளும்! வானத்தின் நீல நிறத்தில் உடை அணியுங்கள், நல்லதே நடக்கும்.
சிம்ம ராசி
அனுமன் ஜெயந்தி நாளில் சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்கள் தொழிலில் மிகப் பெரிய வாய்ப்பகள் கிடைக்கும். எந்த முடிவு எடுத்தாலும் சரியாக ஜாக்கிரதையாக எடுங்கள். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் அனுகூலமாக இருக்கும். உங்கள் உடல்நலமும் ஆரோக்கியமடையும். உங்கள் இணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களே இந்த அனுமன் ஜெயந்தி உங்கள் வாழ்வில் ஒளியேற்ற போகிறது. வேலையில் உள்ளவர்களுக்கு அதை விட நல்ல வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கிடைக்கும். உங்களுடன் பணியாற்றுவோர் உங்களை மதிப்பார்கள். உங்கள் புகழ் உயரும். நிதி நிலைமை நல்லபடியாக மாறும். மெரூன் நிறத்தில் ஆடை அணியுங்கள்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களே இந்த அனுமன் ஜெயந்தி உங்களுக்கு பணப்பலன்களை கொடுக்க போகிறது. லட்சுமி கடாட்சம் இருக்கும். பொருளாதாரத்தை முன்னேற்ற பல்வேறு புதிய வாய்ப்புகள பெருகும். உங்கள் பணி வெற்றி பெறும். உங்கள் டயட்டில் அக்கறை காட்டுங்கள். உடல்நலம் சீராக இருக்கும். உங்களது அதிர்ஷ்ட நிறம் ஊதாவாகும்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு அனுமன் ஜெயந்தி முதல் தொழிலில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். அவர்களின் நிதி நிலைமையும் சீராகும். முன்பை காட்டிலும் பணத்தை சேமிப்பீர்கள். வாழ்வில் வெற்றி பெற உங்களுக்கு யாராவது உதவுவார்கள். வியாபாரம் விருத்தியாகும். பச்சை நிறத்தில் ஆடை அணியுங்கள்.