நிறம் மாறிய பிரித்தானிய ராணியாரின் கைகள்; காரணம் என்ன?
பிரித்தானிய ராணியார் ஓய்வில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது உடல் நலம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் வெளியானது.
லண்டனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பிரித்தானிய ராணியார் கலந்து கொள்ளாத நிலையில், இளவரசர் வில்லியம் மனைவி கேட் மிடில்டன் உடன் நிகழ்வில் கலந்துகொண்டு உரிய மரியாதை செலுத்தினார்.
நீண்ட 22 ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய நிகழ்வில் ராணியார் கலந்து கொள்ளாதது பிரித்தானிய மக்களிடையே, கவலையை ஏற்படுத்தியது. அத்துடன் , அவர் உடல் நிலை குறித்து அரண்மனை மூடி மறைப்பதாகவும் கூறப்பட்டதுடன், ஊடக பிரபலங்களும் அது குறித்த சந்தேகத்தை எழுப்பினர்.
இந்த நிலையில், திடீரென்று ராணியாரின் புகைப்படங்கள் வெளியானது. அந்தவகையில் சமீபத்தில் ஜெனரல் சர் நிக் கார்ட்டருடன் ராணியார் நேரில் சந்திக்கும் ஒரு புகைப்படத்தை அரண்மனை வெளியிட்டது.
அதில், ராணியாரின் கைகள் ஊதா நிறத்திற்கு மாறியிருந்தது. புகைப்படத்தை வெளியிட்டு ராணியார் நலமுடன் இருப்பதாகவே அரண்மனை வட்டாரங்கள் நம்பிக்கை அளித்தன. இந்நிலையில் தற்போது அந்த புகைப்படத்திற்கு விளக்கமளிக்கும் நிலைக்கு அரண்மனை மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து, ஷேக்ஸ்பியர் மருத்துவ மையத்தின் மருத்துவர் ஜெய் வர்மா தெரிவிக்கையில்,
இது ரத்த ஓட்டம் இல்லாமை, பலவீனமான தோல், தோலுக்கு அடியில் உள்ள திசுக்களில் இரத்தம் கசிவு உள்ளிட்ட காரணங்களால் கைகள் ஊதா நிறமாக மாறும் என விளக்கமளித்துள்ளார்.
அதேவேளை அக்டோபர் 19ம் திகதிக்கு பின்னர் நீண்ட ஒருமாத காலம் ராணியார் விருந்தினர்கள் எவரையும் சந்திக்கவில்லை. மட்டுமின்றி மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி அவர் ஓய்வெடுத்து வருகிறார் எனவும் கூறப்பட்டது.
மேலும், இரண்டு நாட்கள் வட அயர்லாந்து செல்ல திட்டமிட்டிருந்ததையும் அவர் ரத்து செய்திருந்தார். இந்த நிலையிலேயே, ஒரு மாதத்திற்கு பிறகு ஜெனரல் சர் நிக் கார்ட்டருடன் ராணியார் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருந்தது.