யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கை அகற்றம்!
யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு நேற்றைய தினம் (02) மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின் மணிக்கட்டுடன் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிக்கையில்,
இப்படியொரு சம்பவம் நடந்ததை உறுதி செய்தார். “கனிலா செலுத்திய போது அல்லது மருந்து செலுத்தும் போது, அருகில் இருந்த நாடி சேதமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் கையின் கீழ் பகுதிக்கு இரத்தம் செல்ல முடியாமல், கை செயலிழந்துள்ளது. இதனால் கையை அகற்ற வேண்டியேற்பட்டுள்ளது.
அது தொடர்பான பூரண விசாரணை நடந்து கொண்டிருக்கிறது“ என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.