ஹக்கீம் பதவி விலக வேண்டும் ; தேர்தலின் பின் வலுக்கும் எதிர்ப்புகள்
தோல்வியை ஏற்றுக் கொண்டு றவுப் ஹக்கீம் பதவி விலக வேண்டும் என கட்சியின் சார்பில் சமூக வலைத்தள பதிவொன்றின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகத்தின் பெயரில் குறித்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
உடனடியாக பதவி விலக்க வேண்டும்
குறித்த பதிவில், சமூகத்தையும் மக்களையும் வருடா வருடம் ஏமாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் துரத்தப்பட வேண்டும் என்று எண்ணத்தோடு மக்கள் கடும் தண்டனை கொடுத்துள்ளனர்.
முஸ்லிம் சமுகத்தின் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு கட்சியின் தலைவரும் செயலாளரும் உடனடியாக பதவி விலக வேண்டும். இளைய தலைமுறையினருக்கு விட்டுக் கொடுத்து ஓரமாக வேண்டும் என்று இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல அம்பாறை மாவட்டத்திலே மாவட்ட செயலாளர் என்று சுற்றித் திரியும் நபரை உடனடியாக பதவி விலக்க வேண்டும். அவருக்கு பதிலாக தகுதியான ஒருவருக்கு அந்த பதவியை கொடுக்க வேண்டும்.
இதனை பல தடவை நாங்கள் கூறினோம். ஆனால் கேட்கவில்லை.அதன் பிரதிபலிப்பும் இந்த தோல்விக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.