முடி உதிர்வு பிரச்சனையா? தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள்
குளிர்காலத் தொடக்கத்தில் முடி உதிர்தல், வறட்சி மற்றும் பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் அதிகரிப்பது இயல்பானது. தேங்காய் எண்ணெயுடன் சில இயற்கை மூலப்பொருட்களைச் சேர்த்து, குறைந்த தீயில் காய்ச்சி, ஆறிய பிறகு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், முடி உதிர்வு குறைந்து கூந்தல் பளபளப்பாக மாறும். தேங்காய் எண்ணெ
யுடன் எவ்வாறான பொருட்களை சேர்க்க வேண்டும் என நாம் இங்கு பார்ப்போம்.

வெங்காயச் சாறு
வெங்காயத்தில் உள்ள சல்பரானது முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி, புதிய முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. குறிப்பாக வழுக்கை விழுவதைத் தடுக்க இது ஒரு சிறந்த மருந்தாகும்.

கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளது. இது இளநரை அடைவதைத் தடுத்து, கூந்தலின் இயற்கை நிறத்தைப் பாதுகாக்கிறது.

வெந்தயம்
வெந்தயத்தில் ப்ரோடீன் மற்றும் லெசித்தின் நிறைந்துள்ளது, இது முடி உடைவதைக் குறைக்கிறது. மேலும், இது தலையில் உள்ள பொடுகு மற்றும் அழுக்குகளை நீக்கி கூந்தலைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

கற்றாழை
கற்றாழையானது ஓரு இயற்கை மாய்ஸ்சரைசராகச் செயல்படுகிறது. மேலும் இது தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்கி, முடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வைட்டமின் E
கூந்தல் வேர்க்கால்கள் சேதமடையாமல் பாதுகாப்பதில் வைட்டமின் E முக்கிய பங்கு வகிக்கிறது. இது உயிரற்ற மற்றும் பலவீனமான முடியை மீண்டும் புத்துயிர் பெறச் செய்து, அடர்த்தியாக வளரச் செய்கிறது.
