குரு-புதனால் உருவாகும் யோகம் ; இந்த ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டப்போகுது
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்களின் பெயர்ச்சிகளால் மட்டுமின்றி, அவற்றின் பார்வைகள், நிலைகள் ஆகியவற்றினால் உருவாகும் யோகங்களும் ஒருவரது வாழ்வில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும்.

அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். இந்நிலையில் கிரகங்களின் இளவரசான கருதப்படும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் ஏப்ரல் 11 ஆம் திகதி மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான். இப்படி குரு பகவானின் ராசிக்கு புதன் செல்வதால் பரிவர்த்தனை யோகம் உருவாகவுள்ளது.

ஜோதிடத்தில் இரண்டு கிரகங்கள் தங்களுக்குரிய ராசிகளை மாற்றி அமர்ந்து பயணிக்கும் போது 'பரிவர்த்தனை யோகம்' உருவாகும். இப்படி குரு பகவானும், புதனும் தங்களுக்குரிய ராசிகளை மாற்றுவதால் பரிவர்த்தனை யோகம் உருவாகவுள்ளது. பரிவர்த்தனை யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம்.

| ரிஷபம் | குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். |
| மிதுனம் | குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். எதிர்பாராத அளவில் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும். திடீர் பண வரவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். |
| கன்னி | குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். |
| தனுசு | குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் நிதி தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். |
| கும்பம் | குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் பண வரவு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பங்குச் சந்தை, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அந்த சொத்து கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. |
| மீனம் | குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் மீன ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். சொத்துக்கள் குவியும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்க நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. |