12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

Horoscope Rasi Guru Peyarchi
By Shankar Aug 22, 2021 12:02 PM GMT
Shankar

Shankar

Report

பொதுவாக நவகிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற அனைத்து கிரகங்களும் அவ்வப்போது அதிசார வக்ர நிலையினால் முன்னும், பின்னும் செல்ல வேண்டிய நிலை உண்டாகும்.

அந்த வகையில் தன்னைவிட அதிக ஈர்ப்பு விசை கொண்ட செவ்வாயை கடந்து செல்லும் போது ஈர்ப்பு விசையில் இருந்து காத்துக்கொள்ள குருபகவான் சாதாரணமாக நகரும் வேகத்தை விட 6 மடங்கு தனது வேகத்தை அதிகரித்து நகர தொடங்குவார் இதனை தான் அதிசார குரு பெயர்ச்சி என்று சொல்லப்படுகிறது.

இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் ஒவ்வொரு ராசிக்கும் என்ன பலன்களை வழங்க இருக்கின்றார் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

மேஷம் :

ராசிகளின் வரிசை நிலையில் முதல் ராசி மேஷம். ஆகவே குருபகவான் இந்த அதிசார குருபெயர்ச்சியின் போது மேஷம் ராசிக்காரர்களுக்கு 10-ம் இடத்தில் இருந்து 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் இடம் பெறுகிறார். ஆகவே இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்களை வழங்குவார். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோஷன் கிடைக்கும், தொழில் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நீங்கள் மனதில் நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியில் முடிவடையும். அரசியல் சார்ந்த பிரமுகர்களுக்கு இந்த குருபெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கும். திருமணம் சார்ந்த விஷயங்கள் வெற்றியில் முடிவடையும். அதேபோல் கணவன் மனைவிக்குள் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருந்தால் அந்த பிரச்சனை இப்பொழுது சரியாகும்.

ரிஷபம் :

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த அதிசார குருபெயர்ச்சி சற்று சுமாராக இருக்கும். அதாவது குருபகவான் தங்களுடைய ராசியில் 10-ம் இடத்தில் இடம் பெயர்கிறார். அதனால் அவர்களுடைய பதவி கொஞ்சம் ஆட்டம் காணும். குரு பத்தாம் இடத்தில் இருந்தால் சிறந்த பலன் இருக்காது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அடிக்கடி பணியிடம் மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். இந்த நிலை தங்களுக்கு 5 மாதங்கள் மட்டுமே ஏற்படும், அதன் பிறகு சரியாகிவிடும். குரு பத்தாம் இடத்தில் இருப்பதினால் ஸ்தானபலம் இல்லை என்றாலும். குரு அவரால் முடிந்த நல்ல பலன்களை ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வழங்குவார்.

அதாவது புதிய வேலை கிடைப்பது, புரமோஷன், வேற இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கி செல்வதற்கு இது போன்று நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்களை தங்களுக்கு சாதகமாக அமைத்து கொடுப்பார்.கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும், விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும், உடல் ஆரோக்கியம் மேம்படும், பணம் வரவு இருந்து கொண்டே இருக்கும், திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும், தவணை தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி சிறப்பான ஒரு காலகட்டம் மற்றும் கடன் தொல்லை நீங்கும்.

மிதுனம்:

புதனுடைய ஆதிக்கம் பெற்ற மிதுனத்திற்கு என்ன பலன்களை கொடுக்கப்போகிறார் என்று தெரிந்து கொள்வோம். இந்த குருபெயர்ச்சியில் உங்களுக்கு ஸ்தானம் பலம் நன்றாக இருக்கிறது. அதாவது வெளிநாடுகளில் கல்வி கற்க அல்லது பணிபுரிய நினைப்பவர்கள் இப்பொழுது முயற்சி செய்தால் உங்களுக்கு நல்ல பலன் உண்டாகும்.

தங்கள் தந்தை மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். குருபகவான் தங்களது ராசியையே பார்ப்பதினால் தங்களுக்கு அனைத்து விஷயத்திலும் நல்ல தெளிவு கிடைக்கும். செல்வம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களும் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

கடகம்:

கடகம் என்பது கால சக்கரத்தின் நான்காம் ராசியாகும். இந்த அதிசார குருபெயர்ச்சியின் போது குருபகவான் தங்களது ராசியில் 8-ம் இடத்தில் இடம் பெயருகிறார். ஆகவே இது தங்களுக்கு கொஞ்சம் கஷ்டகாலம் என்றாலும், அதனை கண்டு பயப்பட வேண்டாம். தங்களுக்கு குரு பெயரும் இடம் வேண்டுமென்றால் சரி இல்லை என்று சொல்லலாம். ஆனால் குரு பார்க்கும் இடம் நன்றாக இருக்கிறது.

அதாவது வரா கடன்கள் இந்த பெயர்ச்சியின் போது வசூலாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும், வீண் செலவுகள் சற்று அதிகரிக்கும். உத்தியோகம் பொறுத்தவரை வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்கள் இப்பொழுது முயற்சி செய்தால் நல்ல வேலை கிடைக்கும்.

சிம்மம்:

சிம்மம் ராசிக்காரர்களுக்கு குரு 7-ம் இடத்திற்கு பெயர்ச்சி பெறுகிறார் ஆகவே சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த அதிசார குருபெயர்ச்சி சிறப்பாக இருக்கும். அதாவது கணவன் மனைவிக்குள் இருந்து வரும் பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். நண்பர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.

தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகம் மற்றும் சொந்த தொழில் ஆகிய இரண்டுமே மிக சிறப்பாக இருக்கும். நீங்கள் எந்த விஷயத்தை எடுத்து நடத்தினாலும் அவற்றில் நீங்களே வெற்றி பெறுவீர்கள். இந்த அதிசார குருபெயர்ச்சியின் போது எண்ணற்ற பலன்களை பெறப்போகிறார்கள் இந்த சிம்மம் ராசிக்காரர்கள்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சியின் போது குருபகவான் உங்கள் ராசியில் 6-ம் இடத்தில் இடம் பெயர்கிறார். ஆகவே இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு ஸ்தானம் பலம் இல்லை. ஆகவே இந்த அதிசார குருபெயர்ச்சி உங்களுக்கு சுமாராக இருக்கும். இருந்தாலும் குருபகவான் அவரால் முடிந்த நன்மைகளை தங்களுக்கு வழங்குவார். அதாவது இந்த பெயர்ச்சியின் போது தங்களுக்கு கடன் சுமை குறையும். எதிரிகளின் தொல்லை நீங்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குரு பார்வையினால் வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

துலாம்:

ராசிகளின் வரிசை நிலையில் 7-ம் ராசியாகும். குருபகவான் இந்த அதிசார குருபெயர்ச்சியின் போது தங்கள் ராசியில் 4-ம் இடத்தில் இருந்து 5-ம் இடத்திற்கு இடம் பெயர்கிறார். ஆகவே இந்த பெயர்ச்சியின் போது உங்களுக்கு ஸ்தானம் பலம் நன்றாக இருக்கிறது. அதாவது குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தங்கள் பிள்ளைகள் வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்க நினைத்தால் அதனை இப்போது முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் எதை தொட்டாலும் அவற்றில் லாபம் பெறுவீர்கள். நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைவீர்கள். தொழிலில் மேன்மை அடைவீர்கள். இந்த அதிசார குருபெயர்ச்சி தங்களுக்கு ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

விருச்சிகம் :

குருபகவான் இந்த பெயர்ச்சியின் போது தங்களது ராசியில் 4-ம் இடத்தில் இடம் பெயர்கிறார். ஆகவே இந்த பெயர்ச்சியின் போது தங்களுக்கு ஸ்தானம் பலம் இல்லை என்பதால் வரவிருக்கும் மூன்று மாதங்கள் சற்று சுமாராக தான் தங்களுக்கு இருக்கும். அதாவது இந்த பெயர்ச்சியின் போது தங்களது தாயாரின் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு வாங்க வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டாகும். மாணவ மாணவிகளுக்கு கல்வி மேம்படும்.

தனுசு :

குருபகவான் இந்த பெயர்ச்சியின் போது தங்களது ராசியில் 2-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்திற்கு இடம் பெயர்கிறார். மூன்றாம் இடம் என்பது முயற்சி ஸ்தானம் ஆகும். ஆகவே தங்களுடைய அனைத்து முயற்சிகளும் தங்களுக்கு சாதகமாக முடிவடையும். அதேபோல் சகோதரர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்க கூடும். பிரிந்து போன உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். சொந்தமாக தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். தங்கள் தாயாருக்கு செல்வாக்கு அதிகரிக்கும் அதன் காரணமாக உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மகரம்:

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்குள் குருபகவான் சில மாதங்கள் பயணம் செய்வார். ஜென்மகுரு மனதில் சில நேரங்களில் சஞ்சலத்தை ஏற்படுத்தினாலும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாகவே உள்ளது. குருவின் பயணம் நவம்பர் மாதத்தில் இருந்து நேரடியாக இரண்டாவது வீட்டிற்கு செல்வதால் பண வரவு நன்றாக இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குரு பார்வை உங்கள் ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுவதால் நிதி நெருக்கடிகள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகள் நீங்கும். ஏழரை சனியில் ஜென்ம சனி இருந்தாலும் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கும்பம்:

சனிபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு 12ஆம் வீடு, ஜென்ம ராசி, 2ஆம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யப் போகிறார். செப்டம்பர் முதல் நேர்கதியில் விரைய ஸ்தானத்தில் பயணிக்கப் போகும் குருபகவான் நவம்பர் மாதம் முதல் இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு வந்து அமர்கிறார். குருவின் சஞ்சாரமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. ஏழரை சனியில் விரைய சனி நடைபெறுகிறது.

சம்பாதிக்கும் பணம் எல்லாம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகிறதே என்ற கவலை இருந்தாலும் குருபகவான் உங்களுக்கு நிறைய பண வரவை ஏற்படுத்தி கொடுப்பார். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம் என்றாலும் சுய ஜாதகத்தில் உங்களுக்கு என்ன தசை நடைபெறுகிறது என்று பார்த்து தொடங்கலாம்.

வேலையில் அதிக கவனம் தேவை. இருக்கும் வேலையை விட்டு விட்டு பறக்க நினைக்க வேண்டாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் எளிதில் சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும் இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் வரும். பிள்ளைகளின் உயர்கல்விக்கு அதிக செலவு செய்வீர்கள்.

மீனம்:

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசி நாதன் குரு பகவான் இந்த ஆண்டு இறுதியில் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திலும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உங்கள் ராசிக்கும் வரப்போகிறார். லாப குரு, விரைய குரு, ஜென்ம குரு என இந்த ஆண்டு குருவின் சஞ்சாரம் உள்ளது.

செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாகும் என்றாலும் நிறைய சுப செலவுகளும் வரும். குருவின் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும்,ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீதும், ஆயுள் ஸ்தானத்தின் மீதும் விழுவதால் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

பொருளாதார நெருக்கடிகள் நீங்கும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பேச்சினால் சில நேரங்களில் சிக்கல்கள் வரும் என்பதால் ஒவ்வொரு முறையும் நீங்கள் பேசும் பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வதன் மூலம் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US