தமிழர் பகுதியில் பல கோடி ரூபா பெறுமதியான பொருளுடன் சிக்கிய குரு
மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சட்ட விரோதமாக வலம்புரிச் சங்குகளின் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் குரு ஒருவர், இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிச் சங்குகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலயத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லத்தீவு விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய முல்லைத்தீவு விசேட அதிரடிப்படை முகாம் பெறுப்பதிகாரி தலைமையிலனா குழுவினர் நேற்றுப் பகல் குறித்த ஆலயப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போதே குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.