12 ஆண்டுகளின் பின் வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான் ; இவர்களுக்கு டபுள் ஜாக்பாட் காத்திருக்கு
வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். மேலும் கிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் வரை இருப்பார். அதோடு குரு பகவான் வக்ர நிலையிலும், வக்ர நிவர்த்தி அடைந்தும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
அந்த வகையில் தற்போது குரு பகவான் கடக ராசியில் வக்ர கதியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். அதுவும் மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
இப்போது மார்ச் மாதத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்: சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வங்கி இருப்பு திடீரென்று அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பங்குச் சந்தையில் இருந்து எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறக்கூடும்.
யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழர்களால் ஏற்படவுள்ள மாற்றம் ; அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்ட விடயம்
ரிஷபம்: ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மீனம்: மீன ராசியின் 4 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தாயுடனான உறவு வலுவடையும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.