குணரத்ன வீரகோனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர்!
மறைந்த முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோனின் (Gunaratna weerakoon) பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இன்று (26-12-2021) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கொழும்பில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள குணரத்ன வீரகோனின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து அரசியலுக்கு வந்த குணரத்ன வீரகோன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முதல்முறையாக கரந்தெனிய பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அன்று இருந்து சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பயணித்த குணரத்ன வீரகோன் (Gunaratna weerakoon) தென் மாகாண சபையின் உறுப்பினராகவும், பின்னர் காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி அமைச்சரவை அமைச்சராகவும் சேவையாற்றினார்.
மேலும், இரு பிள்ளைகளின் தந்தையான குணரத்ன வீரகோன் தனது 74ஆவது வயதில் காலமாகியுள்ளார்..
