வளைகுடா பதற்றம் அதிகரிப்பு ; கத்தார் மீது ஏவுகணைத் தாக்குதல் முயற்சி
கத்தாரின் தலைநகரான டோஹாவின் வான்பரப்பில் இன்று (மார்ச் 10) பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defence Systems) வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து கத்தார் உள்துறை அமைச்சகம் அவசரகால எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாகக் கூறி, பொதுமக்கள் தேவையற்ற வெளிப்படைகளை தவிர்த்து வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வளைகுடா நாடுகளை இலக்கு வைத்து ஈரானியப் படைகள் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இந்தச் சம்பவம் பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தாக்குதலால் உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.