flydubai ஸ்மித் மச்சார் டாட்டூ வரைந்து கொண்டாடும் குஜராத் மக்கள்!
flydubai விமான கடத்தலை தடுத்து உயிருக்கு போராடி பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் உருவத்தை குஜராத்திலுள்ள இளைஞர்கள், தங்களது உடல்களில் வரைந்து கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
தங்களது கைகள், கால்கள், உடலின் பிற பகுதிகளில் ஸ்மித் மச்சாரின் டாட்டூக்களை இளைஞர்கள் வரைந்து அவரைப் போற்றி வருகின்றனர். அதேபோல் ஸ்மித் மச்சாரின் உருவத்தை இளம்பெண்கள் தங்களது முதுகுப் பகுதியில் வரைந்து உலா வருகின்றனர்.

இளம்பெண்கள் முதுகுப் பகுதியில் டாட்டூ
அண்மையில் துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட ஃபிளைதுபாய் விமானத்தை மோதச் செய்ய துணை பைலட் முயன்றார். ஆனால் இந்தியரும், பைலட்டுமான ஸ்மித் மச்சார் இந்த முயற்சியை முறியடித்தார்.
தலை உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்தபோதும், விமான மோதல் முயற்சியைத் தடுத்து உலகம் முழுவதும் புகழ்பெற்றுவிட்டார். மேலும் 2030-ல் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடர்பாகவும் தங்களது உடல்களில் பெண்கள் டாட்டூக்களாக வரைந்து வருகின்றனர்.