திருமணத்தில் மணப்பெண் கன்னத்தை ஓங்கி அறைந்த மணமகன்!
உஸ்பெக்கிஸ்தானில் திருமணத்தின்போது மணப்பெண்ணிடம் விளையாட்டில் தோற்றதால் அவரை அடித்த மணமகன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தச் சம்பவம் ஜூன் 6ஆம் திகதி உஸ்பெக்கிஸ்தானில் சூர்கந்தர்யோபகுதியில் நடந்தது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
திருமணத்தின்ப்போது மிட்டாய் தாள்களை யார் முதலில் அவிழ்க்கிறார் என்ற விளையாட்டைத் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில் போட்டியில் மணப்பெண் வெற்றி பெற்றார்.
இதனால் கோபமடைந்த மணமகன் மணப்பெண்ணின் தலையின் பின்பக்கத்தில் வேகமாக அடித்தார். இதையடுத்து மண்மகளை அறைந்ததற்காக மணமகன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் ஊர் மூத்தோர், தம்பதியின் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஊர்ச் சந்திப்பில் மணமகன் மணப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
தொடர்ந்து திருமண நாளன்றே தம்பதி சமரசம் செய்துகொண்டதாகவும் அவர்கள் தற்போது ஒன்றாக வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் மணமகனுக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள் தடுப்புக் காவல் தண்டனையாக விதிக்கப்படலாம்.
எனினும் உஸ்பெக் திருமணம் ஒன்றில் இவ்வாறு நிகழ்வது இது முதல் முறையல்ல என்றும், கடந்த 2019 இல் மணமகனுக்கு உணவு வழங்கும்போது ஏமாற்றிய மணமகளின் கன்னத்தில் மணமகன் அறைந்த காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.