திருமணமாகி மூன்றே மாதத்தில் மணமகன் உயிரிழப்பு; மனைவி ஆடிய நாடகம் அம்பலம்!
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவனை மனைவி, காலலனுடன் சேர்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் பகுதியைச் சேர்ந்த ஆசிஷ் (27), எம்.எஸ்சி மற்றும் பி.எட் படிப்புகளை முடித்திருந்தார்.

இவருக்கும் இவரது அத்தை மகளான அஞ்சலிக்கும் (23), கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
சாலை விபத்தாக ஜோடித்த மனைவி
ஆசிஷின் குடும்பம் வசதியான நிலையில் இருந்ததால், இந்தத் திருமணம் இரு வீட்டாராலும் மனமுவந்து நடத்தப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகளாக நெருக்கமான உறவில் இருந்த இந்த இரண்டு குடும்பங்களுக்கும் இடையே ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்றிருந்த நிலையில், ஆசிஷ் மற்றும் அஞ்சலி திருமணமும் சிறப்பான திருமணமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 30ம் தேதி அன்று இரவு, ஆசிஷ் தனது மனைவி அஞ்சலியுடன் வழக்கமான நடைப்பயிற்சிக்கு சென்றார்.

அப்போது திட்டமிட்டபடி அஞ்சலி தனது பழைய காதலனான சஞ்சு மற்றும் அவனது நண்பர்களான ரோகித், பாதல் ஆகியோரை அங்கு வரவழைத்தார். ஆசிஷை ஒரு வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்ற அஞ்சலி, அங்கு பதுங்கியிருந்த காதலனுடன் சேர்ந்து கணவனைத் தாக்கினார்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணை
பின்னர் சஞ்சு மற்றும் அவனது நண்பர்கள் ஆசிஷின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். இந்த கொலையை சாலை விபத்து போல சித்தரிக்க ஆசிஷின் உடலை சாலையில் போட்டுவிட்டு, அஞ்சலி தானும் மயக்கமடைந்து விழுந்தது போலவும், தனது தங்க நகைகள் திருடு போனது போலவும் நாடகமாடினார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அஞ்சலியின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
திருமணத்திற்கு முன்பே கல்யாண நிகழ்ச்சிகளில் வேலை செய்யும் சஞ்சு என்பவருடன் அஞ்சலிக்கு காதல் இருந்ததும், கணவனைத் தீர்த்துக்கட்டிவிட்டு காதலனுடன் வாழ அவர் இந்த கொடூர சதித்திட்டத்தை தீட்டியதும் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மகனை பறிகொடுத்த ஆசிஷின் தந்தை மற்றும் அஞ்சலியின் சொந்த குடும்பத்தினரே கணவனைத் துடிதுடிக்கக் கொன்ற அஞ்சலிக்கு மரண தண்டனை மட்டுமே வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.