மணமேடையில் மணமகனுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; ட்ரோன் கெமரா செய்த சம்பவம்
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த திருமண விழா ஒன்றில், மணமகன் ஒருவர் மேடையிலேயே கத்தியால் குத்தப்பட்டார்.
DJ நடனத்தின்போது ஏற்பட்ட சிறிய தகராறே இத்தாக்குதலுக்கு காரணம் என தெரிகிறது. மகிழ்ச்சியான தருணத்தை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ட்ரான் கேமராவில் இந்த தாக்குதல் முழுவதுமாகப் பதிவானது.

ட்ரோன் கெமரா
ட்ரான் ஆப்பரேட்டரின் விழிப்புணர்வால், தப்பியோடிய குற்றவாளியையும், அவரது கூட்டாளியையும் ட்ரான் கேமரா சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு துல்லியமாகப் பின் தொடர்ந்த காட்சிகளை பதிவு செய்தது.
இந்த ட்ரான் வீடியோ, ஆரஞ்சு நிற ஹூடி அணிந்திருந்த குற்றவாளியின் முகம் மற்றும் தப்பிக்கும் பாதையை தெளிவாக காட்டுவதால், இந்த சம்பவம், வழக்கில் மிக முக்கியமான ஆதாரமாக மாறியுள்ளது.
இந்த வீடியோ காட்சிகளை பயன்படுத்தி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், குற்றவாளியும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. காயமடைந்த மணமகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.