திருமண வரவேற்பில் புஷ் அப் செய்து அசத்திய மாப்பிள்ளை! (Video)
புது மாப்பிள்ளையான இந்தியக் கடற்படை வீரர் நீல் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புஷ் அப் செய்து அசத்தி உள்ள காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியக் கடற்படை வீரரான லெப்டினன்ட் நீல் மற்றும் பார்வதி ஆகியோரின் திருமணம் அண்மையில் நடந்தது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சக கடற்படை வீரர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
வைரலாகும் காணொளி
வரவேற்பு நிகழ்ச்சியின் சிறிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்ட நபர் ஒருவர், “இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் நீல் மற்றும் பார்வதி திருமணம் செய்துகொண்டனர்.
புதிய மணமக்களை படைவீரர்கள் அவர்களுக்கே உரிய முறையில் வரவேற்கிறார்கள். மிகவும் அருமை!” என குறிப்பிட்டுள்ளார்.
That is how Indian Navy Officer Lt Neil and Parvathy got married. All three arms of the armed forces have their unique way to welcome the new bride into the tribe. So lovely! pic.twitter.com/EkjI6R1JOt
— Harsh Goenka (@hvgoenka) February 10, 2023
பிப்ரவரி 10ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.
இக்காணொளி தொடர்பில்,
“என் மகன் இந்திய கடற்படையில் தளபதியாக இருந்தபோது இதை நானும் பார்த்திருக்கிறேன். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த வீரர்கள் சில கடினமான உடற்பயிற்சிகளைச் செய்துகாட்டச் சொன்னார்கள் என ஒருவர் குறிப்பிட்டுள்ள தேசமயம்,
“அற்புதம். முக்கியமானவர்களுக்கு முன் திறமையை நிரூபித்துக் காட்டுகிறார்” என்று மற்றொருவர் பாராட்டி உள்ளார்.