வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு விவகாரம்: கைதான முன்னாள் புலி உறுப்பினர்
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கழிவறையிலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துவந்த நிலையில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இக்கைது சம்பவத்தில் திருகோணமலை, உப்புவெளியைச் சேர்ந்த 40 வயதான புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரே கைது செய்துள்ளனர்.
இதேவேளை கைதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை ஆரம்பித்து வருவதாக சி.சி.டியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் லங்கா வைத்தியசாலையில் மீட்கப்பட்ட குண்டு தொடர்பில் முதலில் கைதான நபர் அளித்த வாக்குமூலத்துக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேக நபர் குண்டு வைத்தல், அதனை கையாளல் தொடர்பில் 6 நாள் பயிற்சியளித்தாக தெரிவித்துள்ளதாக குறித்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.