யாழை தொடர்ந்து முல்லைத்தீவில் இடம்பெற்ற பெரும் துயரம்
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் புகையிரதத்தின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் இன்று பகல் ந்பர் ஒருவர் இன்று மதியம் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரி மாய்த்த நிலையில், முல்லைத்தீவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் - கற்குவாரிப்பகுதியில் வசித்து வரும் யுவதியே இவ்வாறான தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
சம்பவத்தில் 21 வயதுடைய திருச்செல்வம் நிதர்சனா என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் யுவதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிறிது காலம் வீட்டில் இருந்துள்ளார்.
வீட்டில் இருந்து வெளியே சென்றுவருவதாக சொல்லிவிட்டு சென்ற யுவதி புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் யுவதியின் உடலம் மீட்கப்பட்டு மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதேவேளை வடக்கில் அண்மைக்காலமாக இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்தி
யாழில் இன்று பகல் இடம்பெற்ற பதறவைத்த சம்பவம்!