தகவல் வழங்கினால் பெரும் தொகை பரிசு; சீனாவின் அதிரடி அறிவிப்பு
தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்துத் தகவல் வழங்கும் சீனா குடிமக்களுக்கு சுமார் $15,000 வரை ரொக்கம் வழங்கப்படும் என் சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான ஊடகம் தெரிவித்துள்ளது.
எத்தகைய அச்சுறுத்தல் தொடர்பான தகவல் அளிக்கப்படுகிறது என்பதன் அடிப்படையில் வெகுமதி அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகவே பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களுக்கு சீன அரசாங்கம் வெகுமதி அளித்து வருகிறது.
ஆனால் இவ்வாரம் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு அதனை நடைமுறைப்படுத்தியது. தேசியப் பாதுகாப்பிற்கு மக்கள் உதவவும், ஆதரவளிக்கவும் அது வழிவகுப்பதாக அமைச்சின் பிரதிநிதி ஒருவர் கூறினார்.
அதேசமயம் சீனா, தேசியப் பாதுகாப்பு அத்துமீறல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது.
மேலும் அவற்றை எவ்வாறு அடையாளம் காண வேண்டும் என்பது சீனாவில் சிறுவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.