இன்று பிற்பகல் மாபெரும் போராட்டம்; ஸ்தம்பிக்குமா கொழும்பு?
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி யினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று கொழும்பு ஹைட் பார்க் மைதானத் தில் இடம்பெறவுள்ளதாக் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் திஸ்ஸ அத்த நாயக்க சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இவ்வாறு கூறினார்.
தற்போது நாட்டில் பொருட்களின் விலை உயர்வு, உரத் தட்டுப்பாடு, அரச சொத்துக்களை வெளிநாட்டு நிறுவ னங்களுக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத் தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து அரசாங்கத்தின் கண்களைத் திறக்க முயற்சிக்கிறோம் என்றும் பல தடைகளைத் தாண்டி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் அவர் கூறினார்.
இந்நிலையில் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதன்போது கூறினார்.