பிரித்தானியா செல்ல காத்திருந்த இலங்கை மாணவர்களுக்கு பெரும் ஏமாற்றம்!
பிரிட்டனிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை மாணவர்களை அனுமதிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டனில் கல்வி பயில விசா விண்ணப்பித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கவுள்ள புதிய குழுவுக்காக இலங்கையின் மாணவர்களை சேர்த்துக் கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்தலொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.
இலங்கை முகம் கொடுத்துள்ள தற்போதைய நெருக்கடி மற்றும் வெளிநாட்டு செலவானியை கட்டுப்படுத்தியுள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் தற்போது சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் பலர் குறித்த காலத்தில் பாடத்திட்டங்களுக்கான பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.