உற்சாகத்தை ஏற்படுத்திய Gpayஇன் அறிவிப்பு!
இந்தியாவில் சிறுவணிகத்தை மேம்படுத்தும் வகையில் சாஷே லோன்களை கூகுள் பே நிறுவனம் அறிமுகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பேவின் இந்த அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
15,000 ரூபாய் வரை கடன் தரும் கூகுள், மாதம் 111 ரூபாய் கட்டினால் போதும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. DMI Finance என்ற நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் இந்தியாவில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
12 மாதங்களில் மட்டும் 167 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை
ஏற்கனவே கடன் வழங்குவது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியுடன் கைகோர்த்துள்ள கூகுள்,தனிநபர் கடனுக்கு ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் மட்டும் கூகுள் பே வழியாக 167 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்திருப்பதாக கூகுள் நிறுவன அதிகாரி அம்பரீஷ் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் நிலையில் உள்ள நகரங்களில் வருவாய் குறைவாக உள்ள மக்களை குறிவைத்து இந்த சிறு கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாம். கூகுள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை அதிகரிக்க பணிகள் நடந்து வருவதாக இந்தியாவிற்கான துணைத்தலைவர் சஞ்சய் குப்தா கூறியுள்ளார்.
Google Merchant Centerஎன்ற புதிய வசதி மூலம் வணிகர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை ஜி பே மூலம் நடக்கும் மோசடிகளில் 12,000கோடி ரூபாய் அளவுக்கான மோசடி தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் 3,500 மோசடி கடன் செயலிகள் பிளாக் செய்யப்பட்டுள்ளதாகவும் கூகுள் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.