ஒரு நாள் காலை விடியும் போது அரசாங்கம் கவிழ்க்கப்பட்டிருக்கும்!
இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கும் பெருமளவு மக்கள் அரசாங்கத்தை விட்டு விலகுவதற்காக எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.
அத்துடன் சிலர் வெகுவிரைவில் அரசாங்கத்தை விட்டு விலகி மாற்றம் ஒன்று மேற்கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் கூட்டு ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்கி தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும் வெகு விரையில் ஒரு நாள் காலை விடியும் போது அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு புதிய அரசாங்கம் உருவாகியுள்ளதென்ற செய்தியை வெளியிட முடியும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.