அரச தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தில் கைவைக்கும் அரசாங்கம்!
கொரோனா பரவலை தடுக்க நாடு நேற்று இரவு முதல் 10 நாட்களுக்கு முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதாவது, அரச ஊழியர்கள் மற்றும் தனியார்துறை ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் 50 வீதத்தை அரசாங்கத்திற்கு தானம் கொடுப்பதற்கான யோசனையொன்று அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட சிலரால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவர்களின் இந்த யோசனை பற்றி இன்னும் சில தினங்களில் அல்லது திங்கள் கூடுகின்ற அமைச்சரவையில் பேச்சு நடத்தி முடிவு செய்யப்படலாம் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.