மில்லியன் கணக்கில் பண மோசடி ; சிக்கிய அரசாங்க அதிகாரிகள்
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கணினி மென்பொருள் அமைப்பில் உள்ள தரவுகளை மாற்றி பணமோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டுத்தாபனத்தின் கணினி மென்பொருள் அமைப்பில் உள்ள தரவுகளை மாற்றியதன் ஊடாக காசோலையை பயன்படுத்தி 27,031,024,15 ரூபா பண மோசடி செய்ததாக மஹரகம, நாவின்ன பகுதியில் அமைந்துள்ள இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் கடந்த 20 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

மேலதிக விசாரணைகள்
அதன்படி, நடத்தப்பட்ட விசாரணையின்படி, பணத்தை மோசடி செய்த சந்தேக நபரும், அவருக்கு உதவிய இரண்டு பெண் சந்தேக நபர்களும் கடந்த 1 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களனி பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என்றும், ஏனைய இரு பெண்களும் 25 மற்றும் 32 வயதுடைய களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பிரதான சந்தேகநபர் மற்றும் பெண்ணொருவர் நேற்று (02) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        