ஏலத்தில் விடப்பட்டது அரசின் சொகுசு வாகனங்கள்
ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் வெள்ளிக்கிழமை (28 ) நடைபெற்றுள்ளது.
அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் நோக்கமாக கொண்டு இவ்வாறு ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான மேலதிக வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஏலமிடப்பட்ட வாகனங்கள்
அதன்படி வொல்வோ ரக ஜீப் ஒன்று, க்ரயிஸ்லர் ரக வாகனம் ஒன்று, டி 09 டிபெண்டர் ரக ஜீப்கள், மஹேந்திரா பொலெரோ வாகனம் ஒன்று, ரோஸா பஸ் ஒன்று, டிஸ்கவரி வாகனம் உள்ளடங்களாக 15 வாகனங்கள் நேற்று ஏலமிடப்பட்டுள்ளன.
மிகுதி வாகனங்களும் விரைவில் ஏலமிடப்படவுள்ளன.
இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் நிரந்தர பணிக்குழாமிற்காக வழங்கப்பட்டிருந்த வாகனங்கள் இல்லை என்பதுடன், முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் பணிக்குழுவினால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் என்பதும் குறிப்பிடதக்கது.