அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அதிகரிக்கப்படும் சம்பளம்
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15,750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவு அடிப்படை சம்பளத்துடன் ஒருங்கிணைக்கப்படும், இதனால் குறைந்தபட்ச சம்பளத்தில் நிகர அதிகரிப்பு 8,250 ரூபாய் ஆகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், சம்பள அதிகரிப்பிற்கு மேலதிகமாக வருடாந்த சம்பள அதிகரிப்பு 80 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்.
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வானது நீதித்துறை சேவைகள், பொது நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் முப்படை அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
இந்த சம்பள உயர்விற்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 325 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிதிக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இந்த சம்பள உயர்வு கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும்.