ஜனாதிபதிகளின் இல்லங்களைப் பொருளாதார ரீதியில் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்
நாட்டின் சில ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனையவை பொருளாதார ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டு மற்றும் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், எட்டு ஜனாதிபதி இல்லங்களை பராமரிப்பதற்காக 13.9 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜனாதிபதி இல்லங்கள் பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படும் வரை அவற்றின் பராமரிப்பிற்காக அரசாங்கம் செலவினங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.