18 கோடியை ஏப்பம் விட்ட அரசாங்க வங்கி அதிகாரி !
அரசாங்க வங்கி ஒன்றின் பிரதான அலுவலகத்துக்கு போலியான ஆவணங்களை கையளித்து 188,825,000/= ரூபாயை பெற்று, ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில், அந்த வங்கியின் முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வங்கியின் முன்னாள் கடன் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த (40) வயதுடையவர் ஆவார்.
மோசடி தொடர்பாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பின்னர், சந்தேகத்திற்குரிய முன்னாள் அதிகாரி குற்றப் புலனாய்வு பிரிவின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு (1) க்கு நேற்று (15) அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சந்தேக நபர் குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் மோசடிக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு (1) விசாரணையை மேற்கொண்டு வருகிறது.