அரிசி பற்றாக்குறை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
டிட்வா சூறாவளி காரணமாக நாடளாவிய ரீதியில், விவசாய காணிகள் சேதமடைந்துள்ள போதிலும், சந்தையில் அரிசி பற்றாக்குறை ஏற்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மரக்கறிக்கான பற்றாக்குறை எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் குறிப்பிடத்தக்க உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த பருவத்தில் சுமார் 80 சதவீத நெல் நிலங்களில் பயிர்ச்செய்கையினை முன்னெடுக்க முடியுமென, தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.