பதவியை இராஜினாமா செய்கின்றாரா கோட்டாபய! உண்மை நிலவரம் என்ன?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டார் என நேற்றையதினம் சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்த அறிக்கையிடல் முழுமையாக பொய்யானது என சமூக வலைத்தளங்களின் பதிவுகளை கண்காணிக்கும் factcrescendo என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளமொன்றின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்கவும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி இராஜினாமா? என்ற செய்தி முற்றுமுழுதும் பொய்யானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதியினால் எதிர்காலங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள், அவருடைய உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களின் ஊடாக அறிவிக்கப்படும்” என்றும் கிங்சிலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஜனாதிபதி பதவிக்கும் நியமிக்கப்படும் முறைமை, அந்த பதவியிலிருந்து நீக்கும் முறை என்பன தொடர்பில் அரசியலமைப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டள்ளதாக சிங்சிலி ரத்னாயக்க தெரிவித்ததாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.