வடக்கின் அதி உயர் பதவிக்கு தமிழரை நியமிக்கும் கோட்டாபய?
இலங்கைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடத்தில் தனது இராஜினாமாக் கடிதத்தினை இன்று கையளித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்திற்குள் வடமாகாண ஆளுநராக அவர் நியமிக்கப்பட அதிகளவு வாய்ப்புக்கள் உள்ளது என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுக்கொண்டிருந்த ஜீவன் தியாராவை அப்பதவியில் இருந்து இராஜினாமாச் செய்யுமாறு கோரும் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்ததோடு அதில் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ஜீவன் தியாகராஜா அப்பதவியில் இருந்து இராஜினாமச் செய்யும் கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளார்.
அத்துடன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இறுதியாகப் பங்கெடுத்திருந்தார்.
அதேபோன்று ஜீவன் தியாராஜாவின் இராஜாநாமாவினால் தேர்தல் ஆணைக்குழுவில் ஏற்படவுள்ள வெற்றியிடத்திற்கு நியமிக்கப்படவுள்ளவர் குறித்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
01.ஆளுநர் செயலகத்திலிருந்து வெளியேறினார் பி.எம்.சாள்ஸ்
02.வடமாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்!
03.சுமந்திரனின் சிபாரிசில் வடக்கின் புதிய ஆளுநர் அரசால் அதிரடி நியமனம்?