இலங்கை அரசியல் வரலாற்றில் பல சாதனைகளை படைத்த கோட்டாபய!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்த போதிலும் இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் பல சாதனைகளை படைத்த ஒருவராக அவர் காணப்படுகின்றார்.
அதன்படி நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி பதவியை ஏற்றவர் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே என்பது முக்கிய அம்சமாகும்.
அதுமட்டுமல்லாது நாட்டின் அரசியலில் முதல் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அவர், இதற்கு முன்னர் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவில்லை.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ எந்தவொரு கட்சித் தலைவராக இல்லாத ஒரேயொரு ஜனாதிபதி ஆவார்.
அதோடு இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதிகளும் கட்சித் தலைவர்களாக இருந்ததோடு அவர்கள் இல்லாத சந்தர்ப்பங்களிலும் கூட பின்னர் கட்சித் தலைவர்களாக மாறியுள்ளனர்.
எனினும் இலங்கை அரசியல் வரலாற்றில் மிகக் குறுகிய காலத்திற்கு மக்கள் வாக்கு மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி என்பதுடன், தனது பதவியை இராஜினாமா செய்த முதலாவது ஜனாதிபதியும் கோட்டாபயவே ஆவார்.
மேலும் தனது பதவிக்காலம் முடியும் முன்னரே மக்களால் துரத்தியடிக்கப்பட்ட ஜனாதிபதியும் அவரே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.