கோட்டாபயவை ஆதரித்தது வாழ்வில் அழியாத கரும்புள்ளி; மனம் வருந்தும் பிரபலம்!
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவளித்த மூத்த இசையமைப்பாளர் கலாநிதி ரோஹண வீரசிங்க, அது குறித்து தற்போது வருத்தம் தெரிவித்ததுடன், அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு தனது ஆதரவையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து ரோஹன வீரசிங்க தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
இன்று எங்கள் அன்பான நந்தா அக்காவும் சுனில் ஐயத்தும் கோட்டகோ கிராம போர்க்களத்திற்குச் சென்றதால் எனது மௌனத்தைப் பற்றி பலர் இப்போது கேட்கிறார்கள். நிச்சயமாக இந்தப் போராட்டத்தை மனதார வாழ்த்துகிறேன். இன்று ராஜபக்சக்களிடம் பலபேர் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பதால் கொஞ்ச நாளாகப் எனக்கு மிகுந்த வருத்தம் இருக்கிறது.
என் வாழ்வில் ஒரு அழியாத கரும்புள்ளி இருந்ததை நான் முழு மனதுடன் ஒப்புக்கொள்கிறேன். இது போன்ற தவறுகள் எவருக்கும் ஏற்படுவது இயல்பு. 2019 இல், நான் 69 லட்சத்தில் ஒருவனாக மட்டுமே இருந்தேன்.
அந்த நேரத்தில் இலங்கையின் முழு அரசியல் அரங்கிலும் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், ஆனால் 69 லட்சத்தில் உள்ள அனைவரையும் போலவே நானும் அந்த கனவு நம்பிக்கைகளுக்கு அடிபணிந்தேன் என்பது உண்மைதான் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இன்று இந்த உண்மை தெளிவாக உள்ளது. இந்த ஆட்சியில் திருட்டு, ஊழல், மோசடி, குடும்பவாதம், அராஜகம், திறமையின்மை, வெட்கமின்மை என தெளிவாக நிரூபித்தும் மக்கள் சொல்வதை கேட்காமல் இருப்பது கேவலம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அமைதியாக இருந்தாலும் மக்கள் போராட்டத்தின் துடிப்பை என்னால் உணர முடிகிறது. வாழ்க போராட்டம் என அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.