கோட்டாபய ராஜபக்ஷ ரிட் மனு நாளை விசாரணை
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனு, நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.
இந்த மனு இன்று பிற்பகல் 1:30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. எனினும், மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முறையாகக் கட்டமைக்கப்படாத காரணத்தினால், வழக்கினை நாளைக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்தது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைய தாம் கைதாகலாம் என்ற அச்சத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றையதினம் தமது கைதை தடுக்க கோரி ரிட் மனு தாக்கல் செய்திருந்தமை குரிப்பிடத்தக்கது.