சிங்கப்பூரில் கால் பதித்த கோட்டாபய!
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் நாட்டை சென்றடைந்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து பயணித்த Saudi Arabian Airlines - SV-788 விமானம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் சென்றிருந்தார்.
அதற்கமைய, கோட்டாபய சற்று முன்னர் சிங்கப்பூர் நேரப்படி இரவு 07.17 இற்கு தரையிறங்கியுள்ளார்.
இலங்கை நேரப்படி இரவு 7.00 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஜனாதிபதி மற்றுமொரு மத்திய கிழக்கு நாட்டிற்கு செல்லவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அதேவேளை மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சி இலங்கையில் இருந்து நேற்று புறப்பட்ட கோட்டாபய மனைவியுடன் மாலைதீவில் தஞ்சமடைந்த நிலையில் அங்குள்ள மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.